இசையமைப்பாளர் Govind Vasantha, 1988ம் ஆண்டு கேரள மாநிலத்திலுள்ள திரிசூர் மாவட்டத்தில் இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவர். இவரின் குடும்பத்தினர் கர்னாடிக் இசை வித்துவான்களாவர். இவரும் அவ்வழியே இசைக்குழு ஒன்றை தொடங்கி இப்போது பிரபல திரை இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார்.
மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியில் ‘Thaikkudam Bridge‘ என்ற இசைக்குழுவை அமைத்து அவர்களின் பாடல்களை வெளியிட்டு இணையத்தில் பிரபலமானார்கள். அதன் பின் 2012 முதல் பல மலையாள சினிமா படங்களுக்கு இந்த இசைக்குழு இசையமைத்து வந்தது.

‘Thaikkudam Bridge’ குழுவில் இருந்து சிலர் வெளியேறிய நிலையில், மெதுவாக தனிப்பட்ட பயணத்தை பின்தொடர தொடங்கினர். 2018ல் தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தின் மூலம் பிரபலமானார் Govind Vasantha.
C. பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ’96’ படத்தின் கதையை போலவே படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் பின்னணி இசையும் பாராட்டப்பட்டது. முக்கியமாக ‘காதலே காதலே’ பாடலும் ‘Life of Ram’ பாடலையும் இன்றளவும் பலரின் Playlistல் இடம் பெற்றுள்ளது.

’96’ படத்துக்கு மனம் வருடும் அழகிய பாடல்களை அமைத்த Govind Vasantha, அந்த ஆண்டின் Filmfare சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. 2018 முதல் பல தமிழ் படங்களில் இவர் இசையமைத்தார், முக்கியமாக 2D தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் அதிகம் இணைந்தார் Govind Vasantha.
‘உறியடி 2’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘Hey Sinamika’, ‘Blue Star’ ஆகிய படங்களில் இசையமைத்த Govind Vasantha, பிரபல Web Seriesகளான ‘Navarasa’ மற்றும் ‘புத்தம் புது காலை விடியாதா’, ‘Sweet Kaaram Coffee’ ஆகியவற்றிலும் பணியாற்றினார்.

இசையமைப்பது மட்டுமல்லாமல், ‘Thaikkudam Bridge’ குழுவில் சேர்ந்தது முதல் ஒரு பாடகராக, வயலின் கலைஞர் மற்றும் Music Producer ஆகவும் இருந்துவருகிறார். இந்த இசைக்குழு இன்றும் பல நாடுகளில் 500க்கும் மேற்பட்ட Concertகளை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் மீண்டும் இயக்குனர் C பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அர்விந்த் சுவாமி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்திலும் சிறப்பாக இசையமைத்துள்ளார். முக்கியமாக நடிகர் கமல் ஹாசன் குரலில் ‘யாரோ இவன் யாரோ’ பாடலும் படத்தின் தொடக்கத்தில் ‘போறேன் நான் போறேன்’ என்ற பாடலும் மனதை உருக்கும் பாடல்களாக படத்தின் கதையை மெருகேற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் Govind Vasantha தன்னுடைய காதலி ரஞ்சினி அச்சுதன் என்பவரை திருமணம் செய்து தற்போது முதல் குழந்தை பிறப்புக்கு தயாராகியுள்ளனர். இவரின் தந்தை பீதாம்பரம் மேனன் தன்னுடைய அரசு பணியை முடித்து 2013 முதல் ‘Thaikkudam Bridge’ குழுவின் பாடகராக சேர்ந்து உலகளவில் கச்சேரிகள் செய்துவருகிறார்.
இசையில் மட்டுமல்லாது தன்னுடைய வாழ்க்கையிலும் புதுமையான, தெளிவான நடைமுறையை பின்பற்றிவரும் கோவிந்த் Vasantha, தன்னுடைய இயற் பெயரில் உள்ள மேனன் என்ற பெயரை நிக்கி தன்னுடைய தாயின் பெயரை தன பெயருடன் சேர்ந்து சமூக சிந்தனை ரீதியான புதுமையையும் கடைபிடித்து வருவது சமிபத்தில் ‘மெய்யழகன்’ பட இசை வெளியிட்டு விழாவில் நடிகர் சூரியாவால் பாராட்டப்பட்டது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]