Netflix, Prime Video என இரு ஓடிடி தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அதற்கு மாற்றாக தமிழ் திரைப்படங்களை காண பலவிதமான ஓடிடி தளம் உருவாகி இருக்கிறது. தற்போது திரையரங்கில் வெளியாகும் சிறு முதல் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தங்களின் தளங்களில் ஒளிபரப்பி வருகின்றன ஆஹா தமிழ், Simply South, & டென்ட் கொட்டா. கீழே இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்களின் பட்டியலை காணலாம்.
1.பேபி அண்ட் பேபி (Baby and Baby)
சிவா & பிரியா என்ற தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தையை சிவாவின் பாட்டி தாத்தாவிடம் காண்பிக்க ஊருக்கு செல்கின்றனர். அப்போது அவர்களின் குடும்ப சொத்துக்கு வாரிசு இனி அந்த குழந்தை தான் என்று கூறிவிட, குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க தொடங்குகிறது. இதற்கு மத்தியில் சிவா தனது பயணத்தின் போது தனது குழந்தையை வேறு ஒருவருடன் மாற்றிக் கொள்கிறார். இந்த குழப்பத்தின் விடை தான் மீதிக் கதை.
Read More: ஜெய் மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியாகியுள்ள பேபி & பேபி திரைப்பட விமர்சனம்
- நடிகர்கள் – ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா, கீர்த்தனா
- இயக்குனர் – பிரதாப்
- வெளியாகும் ஓடிடி தளம் – SUN NXT
2.டிராகன் (Dragon)
மிகவும் ஒழுக்கமுள்ள மாணவனாக இருக்கும் ராகவன், தனது உண்மையான குணத்தை துறந்து கல்லூரியில் பேராசிரியர்களிடம் மிகவும் மோசமான கருத்துக்கள் உடைய மாணவனாக மாற, அதன் பிறகு அவன் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் ‘இளமை முழுமை பெரும் கதை’ தான் டிராகன்.
Read More: Dragon படத்தின் திரைவிமர்சனம் – பிரதீப் ரங்கநாதனின் அசத்தலான பரிணாமம்
- நடிகர்கள் – பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், ஹர்ஷத் கான், VJ சித்து, கயது லோஹர்
- இயக்குனர் – அஸ்வத் மாரிமுத்து
- வெளியாகும் ஓடிடி தளம் – Netflix
3.பயர் (Fire)
திடீரென காணாமல் போகும் பிஸியோதெரபிஸ்ட்டை பற்றி தெரிந்து கொள்ள நடக்கும் விசாரணையில் யாருமே யூகிக்க முடியாத உண்மைகள் வெளிவர அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்படி அந்த உண்மை என்னவாக இருக்கும்? – Fire.
- நடிகர்கள் – பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சுரேஷ் சக்ரவர்த்தி, ரச்சிதா மகாலட்சுமி
- இயக்குனர் – Jsk சதீஷ் குமார்
- வெளியாகும் ஓடிடி – டென்ட் கொட்டா
4.நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (Nilavukku En Mel Ennadi Kobam)
2கே இளைஞர்களின் இளமைக்கால கொண்டாட்டம், நட்பு அவர்களின் காதல் குறித்த காமெடி ரொமான்டிக் திரைப்படம் தான் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”.
Read More: தனுஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரை விமர்சனம்
#NEEKonPrime from March 21st onwards… pic.twitter.com/djVf6SfGTE
— Dhanush (@dhanushkraja) March 18, 2025
- நடிகர்கள் – பவிஷ் நாராயண், மத்தியூ தாமஸ், அனிகா சுரேந்திரன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன்
- இயக்குனர் – தனுஷ்
- வெளியாகும் ஓடிடி – Simply South, Prime Video
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]