திரையரங்குகளுக்குச் செல்ல முடியாத மற்றும் மனம் கவர்ந்த படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் சினிமா ரசிகர்களுக்காகப் பல பிரபல படங்கள் OTT தளங்களில் ஒவ்வொரு வார இறுதியில் வெளியாகும்.
அதைப் போல், இந்த வார இறுதியைச் சிறப்பிக்க ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக இதற்கு முன்னரே திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல தமிழ்த் திரைப்படங்கள் 14 March 2025 பல OTT தளங்களில் வெளியாகவுள்ளது. அதைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு.
1. 2K Love Story
பிப்ரவரி 14, 2025 காதலர் தினத்தில் அற்புதமான ரொமான்டிக் காதல் கதையாகத் திரையரங்குகளில் வெளியாகி இளைஞர்கள் மனம் கவர்ந்த படம்தான் 2K Love Story. இப்படம் காதல், நட்பு என அனைத்தையும் சம அளவில் வெளிக்காட்டும் திரைப்படம். இந்தப் படம் மார்ச் 14 ம் தேதி OTT யில் வெளியாகிறது.
- நடிகர்கள் – ஜாகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ்
- இயக்குனர் – சுசீந்திரன்
- IMDb ரேட்டிங் – 9.0/10
- OTT தளம் – Aha Tamil மற்றும் Simply South
- OTT யில் வெளியாகும் தேதி – 14 மார்ச் 2025
Read More: சுசீந்திரனின் 2K Love Story பட விமர்சனம்.
2. SeaSaw
ஜனவரி 3, 2025 திரையரங்குகளில் வெளியான அச்டின் திரில்லர் திரைப்படம்தான் SeaSaw. இப்படத்தில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான நடராஜன்(நட்டி), நிஷாந்த் ருசோ ஆகியோர் நடித்துள்ளனர். காணாமல் போன ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் இன்வெஸ்டிகேஷன் நிறைந்த ஆக்ஷன் திரைப்படம் SeaSaw.
- நடிகர்கள் – நடராஜன், நிஷாந்த் ருசோ, படினே குமார், நிழல்கள் ரவி
- இயக்குனர் – குணா சுப்பிரமணியம்
- IMDB ரேட்டிங் – 7.1/10
- OTT தளம் – Aha Tamil மற்றும் Simply South
- OTT யில் வெளியாகும் தேதி – 14 மார்ச் 2025
Read More: 14 March 2025 – வெள்ளித்திரையில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள்
3. காதல் என்பது பொதுவுடைமை
நடிகை லிஜோமல் ஜோஸ் நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்துடன், சமூகத்தில் வேறுபட்ட ஒரு காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு பிப்ரவரி 14, 2025 திரையரங்குகளில் வெளியாகிய ‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம் OTT ல் வெளியாகவுள்ளது.
Read More: காதல் என்பது பொது உடமை – திரைவிமர்சனம்
- நடிகர்கள் – ரோகினி, லிஜோமல் ஜோஸ், அனுஷா
- இயக்குனர் – ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
- IMDb ரேட்டிங் – 9.1/10
- OTT தளம் – Tentkotta மற்றும் Simply South
- OTT யில் வெளியாகும் தேதி – 14 மார்ச் 2025
4. ராஜா கிளி
தம்பி ராமையா நடிப்பில் காமெடி நிறைந்த Fun Full படமாக டிசம்பர் 27, 2024 திரையரங்குகளில் வெளியாகிய ராஜா கிளி திரைப்படம் தற்போது OTT யில் வெளியாகவுள்ளது. ரசிகர்களை எண்டெர்டைன்ட்மென்ட் செய்யும் நகைச்சுவை படமாக இப்படம் அமையும்.
- நடிகர்கள் – தம்பி ராமையா, சமுத்திரக்கனி, சுவேதா ஷ்ரிம்ப்டன்
- இயக்குனர் – உமாபதி ராமையா
- IMDb ரேட்டிங் – 8.8/10
- OTT தளம் – Tentkotta
- OTT யில் வெளியாகும் தேதி – 14 மார்ச் 2025
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]