8 கோள்களின் சுற்றுப்பாதையும் நேர்கோட்டில் நிற்கும் அறிய நிகழ்வு 28 பிப்ரவரி 2025 நடக்கிறது. இதனையொட்டி கதைக்களத்தை கச்சிதமாக கணக்கிட்டு வெளியாகியுள்ள ‘அகத்தியா’ படம், நகைச்சுவையான திகில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தின் நிகழ்வுகளை 80 வருடகால ரகசியங்களை பிணைத்து அதில் சித்த மருத்துவம், இந்திய சுதந்திர போராட்டம் பற்றிய கருத்துக்களை பேசியுள்ளார் இயக்குனர் பா. விஜய்.
அகத்தியா படத்தின் கதை
சினிமாவில் கலை இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கும் அகத்தியா, தன்னுடைய முதல் படத்துக்கு தேவையான பணத்தை திரட்டி தயாரிப்பாளருடன் சேர்த்து முதலீடு செய்ய, படம் தொடக்கத்திலேயே நின்றுவிட, அடுத்ததாக நண்பர்களுடன் சேர்ந்து பாழடைந்த பிரெஞ்சு கால புதுச்சேரி அரண்மனையை ‘Scary House’ ஆக மாற்றிவிடுகிறார்கள். அங்கு போலியான பேய்களுக்கு நடுவே நடக்கும் அமானுஷ்யமான நகைச்சுவையான மர்மங்கள் வெறும் கட்டுக்கதைகளா? அல்லது அந்த பிரெஞ்சு அரண்மனைக்கு அதில் இன்றும் அயராமல் வளம் வரும் பேய்களின் நோக்கம் கதைகளுக்கு அப்பாற்பட்டதா? என்பது தான் கதைக்களம்.
Good things take time! ✨ The release of #Aghathiyaa has been rescheduled to Feb 28, 2025 and we promise it will be worth the wait! Stay tuned for more updates! 🎥💫@IshariKGanesh @VelsFilmIntl @WamIndia @aghathiyaa @JiivaOfficial @akarjunofficial #RaashiKhanna @pavijaypoet… pic.twitter.com/q6pz3htUFd
— Vels Film International (@VelsFilmIntl) January 30, 2025
தனித்துவமான நடிகர்கள்
நடிகர் அர்ஜுன் சார்ஜா, 1940களில் உலகம் சுற்றி பல மருத்துவ நுணுக்கங்களை கற்ற சித்த மருத்துவர் ‘சித்தார்த்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை காலத்தின் அழிவில் இருந்து மட்டுமல்லாமல் அந்நியர்களின் வன்மத்திலிருந்தும் காப்பாற்ற அவரின் கண்டுபிடிப்புகளை பதிவிட்டு வரும் முற்போக்கு சிந்தனையாளராகவும் அவரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
நடிகர் ஜீவா, ‘அகத்தியா’ என்ற கதாபாத்திரத்தில் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் கடுமையான சூழல்களால் துவண்டு பின்னர் வாழ்க்கையில் முக்கியமான நோக்கத்துடன் ஓடிஏ ஆரமிக்கும் பாத்திரத்தை திறம்பட செய்துள்ளார்.
நடிகை ராசி கண்ணா தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்ப தெளிவாக நடித்துள்ளார். படத்தின் துவக்கத்தில் நடிகர்கள் யோகி பாபு, VTV கணேஷ், ரேட்டிங் கிங்ஸ்லி, ஷா ரா ஆகியோர் நகைச்சுவையான வசனங்களால் ஜொலித்தனர்.

படத்தின் பலம்
இயக்குனரும் எழுத்தாளருமான பா. விஜய் அவரின் புரட்சிகரமான கருத்துக்களை மிக நுணுக்கமாக படத்தின் கதைக்களத்துடன் நெய்துள்ளார். முக்கியமாக சுதந்திர போராட்டத்தின் கருத்துக்களை முற்போக்குவாதியின் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் புரட்சியாளரின் விழிவழியாகவும் கூறியது அவரின் எழுத்தின் வளத்தை வெளிப்படுத்துகிறது.
படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் காட்சியமைப்புகள் முதல் பாதியில் ஆரம்பமாகி இரண்டாம் பாதியிலும் தொடர்வது பெரிய பலம். குறிப்பாக படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் வரும் கிராபிக்ஸ் வடிவமைப்பு நிச்சயம் பலரை கவரும்.
படத்தின் பலவீனம்
முதல் பாதியில் அங்கங்கே காட்டப்பட்ட திகில் காட்சிகளும் எதிர்பார்ப்பும் படத்தின் போக்கில் மறைந்துவிடுகிறது. முதல் பாதி முழுவதும் நகைச்சுவை, திகில், திருப்பங்கள் என நிறைந்திருக்க, அவை இரண்டாம் பாதியில் தனித்து தெரியவில்லை.
பல கதாபாத்திரங்கள் படத்தில் வந்து சென்றாலும் அவர்களின் பங்கும், நேரமும் கதையின் ஓட்டத்திற்கு தேவையான நேரங்களில் உபயோகிக்கப்படவில்லை. நடிகர் செந்தில் பல வருடங்களுக்கு பின்னர் திரையில் வந்தாலும் அவருக்கான பங்கு இல்லாமல் இருப்பதும், நகைச்சுவை நடிகர்களுக்கான இடம் அகத்தியா படத்தில் குறைவாக இருப்பது பெரிய பலவீனம்.
பா. விஜய் இயக்கத்தில் முக்கியமான கருத்துக்களும், தேவையான சிந்தனைகளும் மக்களை படத்துடன் இணைக்க, நிகழ் கால காட்சிகளில் வரும் சம்பவங்கள் அவற்றை ஊன்றுகோலாக பயன்படுத்தி கதையை நகர்த்துவதாக மட்டுமே உள்ளது. குடும்பத்துடன் சென்று இந்த வார இறுதியில் நிச்சயம் ரசிக்கும்படியான படமாக ‘அகத்தியா’ அமைந்துள்ளது.
விமர்சனம்
பா. விஜய் இயக்கத்தில் முக்கியமான கருத்துக்களும், தேவையான சிந்தனைகளும் மக்களை படத்துடன் இணைக்க, நிகழ் கால காட்சிகளில் வரும் சம்பவங்கள் அவற்றை ஊன்றுகோலாக பயன்படுத்தி கதையை நகர்த்துவதாக மட்டுமே உள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]