இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கத்தில், நகைச்சுவை நடிகராகவும் தற்போது முன்னணிக் கதாநாயகனாகவும் நடித்து வரும் நடிகர் யோகி பாபு நடித்துள்ள லெக் பீஸ் (Leg Piece) திரைப்படம் மார்ச் 7 ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் போன்ற பல நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத நான்கு நபர்கள் தற்செயலாகச் சந்தித்து, ஜாலியாக குடிக்கச் செல்லும் இடத்தில், சிறு விஷயத்தால் அவர்களுக்கு ஆரம்பமாகும் பிரச்சனைகளைப் பார்வையாளர்களுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் கொடுக்காமல் சாதாரணமாகவும், நகைச்சுவையாகவும் வெளிப்படுத்தும் திரைப்படம்தான் ‘லெக் பீஸ்’ (Leg Piece).
‘லெக் பீஸ்’ (Leg Piece) திரைக்கதை
சில வருடங்களுக்கு முன், மூன்று சிறுவர்கள் மரத்தில் ஏறி எதையோ காண்பது போன்று படத்தின் முதல் காட்சி இருக்கும். அதன் பின், சில வருடங்களுக்கு பிறகு என கதை தொடங்கும். அதில், தனக்கென குடும்பம் என்று யாரும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கையை ஓட்டுவதற்காக சிறு சிறு வேலைகளை செய்து வாழ்ந்து வரும் நான்கு நபர்கள் தான், ரமேஷ் திலக்(மிமிக்ரி கோபி), ஸ்ரீநாத், குயில் குமரன், மற்றும் கருணாகரன் (திடீர் திருப்பதி). இவர்கள் நால்வரும் சாலையில் கண்டெடுக்கும் 2000 ரூபாயை வைத்து எதிர்ச்சியாக சந்தித்து, உடனை நண்பர்கள் ஆகி குடிப்பதற்காக ஒயின் ஷாப் சென்றுவிடுவார்கள். அந்த 2000 ரூபாய் கள்ள நோட்டு என தெரியாமல், அவர்கள் நால்வரும் தங்களது வாழ்க்கை சோகங்களை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அதில் ரமேஷ் திலக் மற்றும் கருணாகரன் தனது காதல் கதையையும், ஸ்ரீநாத் தன் தங்கை இறப்பினால் வாடி வாழ்வதையும் கூறுவார்கள்.
அதன் பின், 2000 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என கோபத்தில் ஒயின் ஷாப் ஓனர் மொட்டை ராஜேந்திரன்(சபரி) இவர்களை விசாரித்து, தனது இடத்தில் கட்டி வைத்து விடுவார். அதை தொடர்ந்து சிறிது நேரத்தில், மொட்டை ராஜேந்திரன் அவரது எதிரிகளால் கொலைசெய்யப்படுவார். இந்த கொலையை செய்தது ரமேஷ் திலக், ஸ்ரீநாத், குயில் குமரன் மற்றும் கருணாகரன் என நினைத்து யோகி பாபு போலீஸ்ஸிடம் கூறிவிடுவார்.
அதை தொடர்ந்து, இவர்கள் நான்கு பேரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நகைச்சுவை கலந்த கதையாக லெக் பீஸ் திரைப்படம் வெளிப்படுத்தும். மேலும், இந்த கொலையை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? ஆரம்பத்தில் காட்டப்பட்ட அந்த சிறுவர்கள் யார்? என இப்படி பல கேள்விகளை மையமாக வைத்து (Leg Piece) படத்தின் கதை தொடரும்.
தனித்துவ கதாபாத்திரங்கள்
தனித்துவ கதாபாத்திரங்கள் என குறிப்பிடும் வகையில் இப்படத்தில் எந்த பாத்திரமும் காட்டப்படவில்லை என்றாலும், இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றாவாறு நேர்தியாகவே நடித்துள்ளார்கள் என கூறலாம். முக்கியமாக, இப்படத்தில் பல நகைச்சுவை நடிகர்கள் நடித்திருப்பதால், ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறும், தங்களது இயல்பான நகைச்சுவை திறனை வெளிக்காட்டி நடித்துள்ளனர்.
#LegPiece Trailer Out Now!https://t.co/pAqCA1F4q2
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 24, 2025
Releasing In Cinemas On March 7. pic.twitter.com/BpMt1HG9YT
Source: Christopher Kanagaraj (X)
படத்தின் பலம்
பல நகைச்சுவை நடிகர்கள் நடித்து அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நகைச்சுவை திறனையும் கவுண்டர் பேச்சையும் வெளிக்காட்டி நடித்திருப்பது இப்படத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவுள்ளது. மேலும், இப்படம் காமெடி எண்டெர்டைன்மென்ட் படம் என்பதற்கு ஏற்றவாறு அமைந்திருப்பது, நகைச்சுவை படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு சிறப்பான ஒன்றாக அமையும்.
படத்தின் பலவீனம்
இப்படத்தின் கதையை பார்வையாளர்களுக்கு எந்த வித சுவாரசியமும், எதிர்பார்ப்பும் தராமல் ஒரேபோக்கில் வெறும் காமெடி பேச்சுக்களை மட்டும் வைத்து நகர்த்திருப்பது, அனைவருக்கும் சலிப்படைய செய்யும் ஒன்றாகவுள்ளது. மேலும் படத்தின் கதையை பற்றி கூட யோசிக்காமல், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என நினைத்து பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக, இப்படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் பெரிதளவு காட்டப்படாமல் உள்ளது பலவீனமான ஒன்றாகவுள்ளது. மேலும், இப்படத்தில் ஆக்ஷன், திரில்லர், காதல் காட்சிகள் என எதுவும் இல்லாமல் இருப்பது பார்வையாளர்களுக்கு சிறப்பற்றதாகத்தான் அமையும்.
விமர்சனம்
அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நேர்த்தியாகவும் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியும் நடித்துள்ளனர். காமெடி திரைப்படம் என்பதற்கு ஏற்றவாறு இப்படம் இருந்தாலும், பெரிதளவு எந்த கருத்தையும் மையப்படுத்தாமல், ஆக்ஷன், திரில்லர் என எந்த காட்சிகளும் இல்லாமல், நகைச்சுவையாக மட்டுமே எடுக்கப்பட்ட சாதாரணமான திரைப்படமாக இருப்பதால், படத்தின் கதை என்னவென்று தெரிந்து கொள்ள ஒரு முறை பார்ப்பதற்கு ஏற்றவாறு ‘லெக் பீஸ்’ திரைப்படம் உள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]