சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றும் ‘Coolie’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரஜினியின் மாஸ் ஸ்டைலில் ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த கதையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்பு மிகுந்த கோலாகலத்துடன் பல்வேறு லொக்கேஷன்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணி இசையை அனிருத் ரவிச்சந்தர் வழங்க, ரசிகர்களிடையே பாடல்களின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
It's a super wrap for #Coolie 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/ulcecQKII1
— Sun Pictures (@sunpictures) March 17, 2025
அது மட்டுமல்லாமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 150 முதல் 175 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், இவர் தனது முந்தைய படங்களான ‘மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ போன்ற அனைத்துப் படங்களையும் சரியாகத் திட்டமிட்டுக் குறைந்த கால அளவில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: Coolie படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி தரும் King நாகர்ஜுனா…
இப்படி இவரது குறைந்த கால இயக்கத்தில், வெற்றிகரமாக வெளியான இந்த அனைத்துப் படங்களும் மக்களிடையில் நல்ல வரவேற்பு பெற்று, ஹிட் படமானது. அதைப் போலவே Coolie திரைப்படமும், லோகேஷ் கனகராஜ் படைப்பின் மற்றொரு வித்தியாசமான அத்தியாயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும், இப்படத்தில் வேறு இந்திய மொழி நடிகர்களான உபேந்திரா, நாகார்ஜுனா, ஷோபின் ஷாகிர் ஆகியோர் நடித்துள்ளார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு கிடைத்துள்ளது. ஹிந்தி நடிகரான அமீர் கானும் இப்படத்தில் நடித்துள்ளார் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
Read More: Coolie படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் “kuttettan” Soubin Shahir!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே மாஸாகதான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. அதையும் தாண்டி Coolie படத்தில் பல மொழி முன்னணி நடிகர்கள் அவருடன் இணைந்து நடித்திருப்பது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த இப்படம் 2025 ல் வெளியாகும் என எண்ணப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]