ஜூலை மாதம் 30-ஆம் தேதி கேரளாவில் வயநாடு பகுதியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பலரும் வீட்டை இழந்து மாயமான நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்காக மத்திய, மாநில அரசுகள் உதவி வரும் நிலையில் சினிமா பிரபலங்களும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்த காரணத்தால் வயநாடு பகுதியில் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணால் மூடப்பட்டு சுமார் 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கின. 1000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு துறை, ராணுவ வீரர்கள். விமானப் படை என தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு மாநில அரசுகள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் என பலரும் உதவி செய்து வந்த நிலையில் சினிமா நடிகர், நடிகைகளும் உதவி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வயநாடு நிலச்சரிவிற்கு ரூ,20 லட்சம் தந்துள்ளார் என அவரது மேனேஜர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ,50 லட்சமும் நிவாரண நிதி வழங்கி உள்ளனர். அகரம் பவுண்டேசன் மூலம் பல்வேறு வகையில் ஏழை எளிய மாணவர்களின் உதவி செய்து வரும் சிவகுமார் குடும்பம் தற்போது வயநாடு நிலச்சரிவிற்கும் உதவியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து 20 லட்சம் வழங்கியுள்ளனர். தாங்கள் வழங்கிய நிதியை ரௌடி பிக்சர்ஸ் மூலம் அறிவித்திருந்தனர்.
நடிகர் கமல்ஹாசன், வயநாடு நிலச்சரிவுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக கொடுத்துள்ளார்.

நடிகர் பகத் பாசில் அவரது மனைவியும், நடிகையுமான நஸ்ரியா ஆகியோர் இணைந்து ரூ,25 லட்சம் வழங்கி உள்ளனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ,10 லட்சம் மற்றும் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.

மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மான் ஆகியோர் இணைந்து ரூ,35 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளனர்.

மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லால், 3 கோடி ரூபாய் நிவாரண தொகையாக கொடுத்துள்ளார். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு சென்று உதவி செய்துவந்தார்.

தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 25 லட்சம் தந்து உதவியுள்ளார்.

பிரபல நடிகர் பிரபாஸ் தனது பங்கிற்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் ஜெயராம் அவர்கள் 5 லட்சம் தந்து உதவுள்ளார்.

கேரளாவின் தனியார் அமைப்பு ஒன்றில் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை நிகிலா விமல் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடவுளின் தேசமாக பார்க்கப்படும் கேரளாவில் இத்தகைய துயர சம்பவம் அனைவரையும் சோகமடைய வைத்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 250-க்கு மேற்பட்டோர் காயமடைந்தும், 130-க்கு மேற்பட்டோர்என்ன ஆனார்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை.
தன்னார்வலர்கள், மீட்புப்படையினர் போன்றோர் ஒரு வாரத்திற்கும் மேலாக நிலைமையை சரி செய்ய முயற்சித்து வருகின்றனர். பல்வேறு பகுதியில் இருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தந்து உதவி வருகின்றனர். பலரும் வயநாடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]