இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நகைச்சுவையான ஒரு குடும்ப படத்தில் ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, VTV கணேஷ், நட்டி நடராஜன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா ஆகியோர் நடித்துள்ள படம் ‘Brother’.

Screen Scene Media Entertainment நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இன்று வெளியானது. இயக்குனர் ராஜேஷ் உடைய இயல்பான வழக்கமான நகைச்சுவை படங்களின் வரிசையில் இந்த படமும் அமைந்துள்ளது.
Actor – Director brother ♥️🤩@actor_jayamravi ‘s #Brother Grand Audio & Teaser Launch ❤️🔥😍#BrotherAudioLaunch#BrotherFromDiwali pic.twitter.com/Nl7qlT4RV0
— Screen Scene (@Screensceneoffl) September 21, 2024
ஒரு கூட்டு குடும்பத்துடன் இணைந்து சாப்பிடும் கதாநாயகன் வாழ்க்கையை பற்றி மிக சுலபமான கண்ணோட்டத்தில் விளையாட்டாக பதிலளிக்கும் காட்சியுடன் இந்த டீசர் தொடங்குகிறது. அதை தொடர்ந்து சண்டை, காதல் என பல கண்ணோட்டத்தில் வெளியாகியுள்ளது இந்த டீசர்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘பிரதர்’ படத்தில் ஐந்து பாடல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே MakkaMishi என்ற பாடல் வெளியாகி இணையத்தில் இன்றும் ட்ரெண்டாகி வருகிறது. பல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் இந்த பாடல் மீண்டும் மீண்டும் வைரலாகி வருகிறது.
வழக்கம்போல் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் இந்தப்படத்திலும் துடிப்பான பாடல்கள் வெளியாகியுள்ளது. பாடகர் கார்த்திக், பாடகி மதுஸ்ரீ,யோகி சேகர், சுனிதா சாரதி, ஸ்டீபன் சக்கரியா, பால் டப்பா, டகால்ட்டி, சூப்பர் சிங்கரில் பாடிய அஹானா பாலாஜி, பார்கவி ஸ்ரீதர் ஆகியோர் இந்த பாடலக்ளை பாடியுள்ளனர். 2024 தீபாவளிக்கு ‘பிரதர்’ படம் வெளியாகவுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com