கன்னடத்தில் வெளியாகி தமிழ், மலையாளம், இந்தி என இந்தியா முழுக்க ஹிட் அடித்தப்படம் ‘காந்தாரா’. 2022-ம் ஆண்டு வெளியான இப்படத்தை ரிஷப் ஷெட்டி என்பவர் எழுதி இயக்கி அவரே இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். காந்தாரா என்றால் தமிழில் ‘மாயவனம்’ என்று அர்த்தம்.

அரசாங்கமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பழங்குடியின மக்களின் நிலங்களை, அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை எப்படி சுருண்டுகின்றன, அதை எப்படி பழங்குடியின மக்கள் வலிமையோடு எதிர்க்கிறார்கள் என்பதே காந்தாரா படத்தின் கதை. இந்தியா முழுக்க படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் காந்தாரா பார்ட் 2 படத்துக்கான வேலைகள் தொடங்கின.
தற்போது படத்துக்கான ப்ரீ – ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வருகிற மே 3-ம் தேதி வெள்ளிக்கிழமை ஷூட்டிங் தொடங்குகிறது. ‘காந்தாரா’ படத்தின் சீக்வெல் இல்லை இது. மாறாக ப்ரீக்வெல் அதாவது ‘காந்தாரா’ படத்தில் காட்டபட்ட காலகட்டத்துக்கு முன்னர் நடக்கும் கதை என்பதால் ‘காந்தாரா எ லெஜண்ட்’ KantaraChapter1 என பெயரிட்டிருக்கிறார்கள். கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி உள்பட 7 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
ப்ரீயட் படம் என்பதால் மங்களூரிவில் கடந்த மூன்று மாதங்களாக செட் அமைக்கும் பணிகள் நடந்துவந்தன. இப்போது செட் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் ஷூட்டிங் தொடங்கயிருக்கிறது.
கடந்த மாதம் ரிஷப் ஷெட்டியும் அவரது மனைவியும் மோகன்லாலை சந்தித்துப்பேசியிருந்த நிலையில் காந்தாரா-2 வில் அவர் நடிக்கப்போவதாக செய்திகள் கசிந்தன. அத்தகவல் இப்போது உண்மையாகியிருக்கிறது. மோகன் லால் காந்தாரா-2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]