இயக்குனர் ஸ்ரீராம் அனந்தசங்கர் அவர்கள் எழுதி, இயக்கிய “Rocket Driver” படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நடிகர் STR இந்த டிரைலரை launch செய்தார். 2019-ல் வெளியான “K.D. என்கிற கருப்புதுரை” படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற நாக விஷால் இந்த படத்தில் இளம் வயது அப்துல் கலாம் ஆக நடித்துள்ளார் என்பது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரோடு நடிகை சுனைனா, நடிகர்கள் விஷ்வத், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமசந்திரன் துரைராஜ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
Happy to launch the trailer of #RocketDriver 🛺🚀https://t.co/6esaZNMHgb
— Silambarasan TR (@SilambarasanTR_) October 4, 2024
Wishing the very best to this young and talented team! @actorvishvath @TheSunainaa @sriram_a27 @iamkaushikkrish @iamyuvibv @anirudhvallabh @ProSrivenkatesh @storiesbtshore_ @zeemusicsouth pic.twitter.com/UE93Ja9EZj
படத்தில் ஆட்டோ டிரைவர் ஆக இருக்கும் கதாநாயகன் ஆட்டோவில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி இளம் வயதில் வந்து ஒரு பயணியாக ஏறியபின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் இதற்கு முன் வெளியான “மறக்குமா நெஞ்சம்” படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் | இயக்குனர் | இசை | படக்குழுவினர் |
Rocket Driver | ஸ்ரீராம் அனந்தசங்கர் | கௌஷிக் கிருஷ் | நாக விஷால், சுனைனா, விஷ்வத், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமசந்திரன் துரைராஜ் |
‘Dada’ இயக்குனருடன் JR 34 படத்தில் இணையும் நடிகர் ஜெயம் ரவி!
ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் first look posters வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்ற தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]