2000-களில் இயக்குனர், 2010-களில் நடிகர், 2020-களில் வில்லன் என ஒவ்வொரு தசாப்தத்திலும் தன்னை சினிமா உலகம் மறக்க முடியாத வகையில் சிறப்பான படைப்பை தந்து வருகிறார் S. J. Suryah.
திருநெல்வேலியில் இருந்து சினிமா கனவோடு சென்னையை நோக்கி வந்தவர்களில் SJ. சூர்யாவும் ஒருவர். பல அவமானம், புறக்கணிப்பை தாண்டி அவ்வோப்போது சினிமாவில் தன் முகத்தை காட்டிக்கொண்டு வந்தார் S. J. Suryah.
புளியங்குடி அருகே வாசுதேவநல்லூரில் பள்ளிப்படிப்பை முடித்த SJ.சூர்யா, சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி படிக்கும் போது வாரத்தில் 5 நாட்கள் கல்லூரிக்கு செல்வது, மீதி இரண்டு நாட்கள் பல ஸ்டூடியோவிற்கு சென்று வாய்ப்பு தேடுவது என கல்லூரி வாழ்வை கழித்தார். மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நிராகரித்து, திரைப்படங்களில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் தங்கினார்.
சென்னையில் தங்குவதற்கு பண தேவைகளை பூர்த்தி செய்ய ஹோட்டல்களில் பணிபுரியத் தொடங்கினார். பின்னர் அவர் K. பாக்யராஜ் இடம் பணியாற்றினார். தொடர்ந்து ஆசை (1995) சுந்தர புருஷன் (1996) ஆகிய படக்குழுவில் ஒருவராக பணியாற்றினார், அதே சமயம் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் சேவல் சண்டை வீரராக நடிகராகவும் தோன்றினார்.

ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது “புல்வெளி புல்வெளி” என்ற பாடல் முழுவதும் SJ. சூர்யாவால் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பாடல் காட்சிகள் அஜித்திற்கு பிடித்துப்போக பின்னர் உல்லாசம் (1997) படத்தில் பணிபுரியும் போது, படத்தின் முன்னணி நடிகர் அஜித் குமார் அவர்களின் நெருங்கிய நட்பு கிடைக்க தன்னிடம் ஒரு கதை இருப்பதாக கூறி, கதையை அஜித்திடம் கூறினார். கதை நன்றாக இருந்ததால் படத்தைத் தயாரிக்க S. S. சக்கரவர்த்தியை அணுக உதவினார் அஜித். அப்படி உருவான படம்தான் வாலி.
வாலி படத்தின் கதையை கூறிய போது ஒரு பைக் வாங்கி கொடுத்த அஜித், படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு காரை SJ. சூர்யாவிற்கு பரிசளித்தார். இது SJ. சூர்யாவிற்கு உற்சாகத்தை தந்தது. இது அவருக்கு சினிமா வாழ்வில் கிடைத்த முதல் வெற்றி என்றே கூறலாம்.
இந்த படம் SJ. சூர்யாவின் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து AM. ரத்னம் அவர்களின் மூலம் மற்றுமொரு வாய்ப்பு கிடைக்க விஜய், ஜோதிகாவை வைத்து காதல் கான்செப்ட் தந்த படம் தான் குஷி.
குஷி, வாலி போன்ற படங்களில் இயக்குனராக முதலில் 2000 காலகட்டத்தில் அறிமுகமானார். இன்று தல, தளபதி என கொண்டாடும் தமிழ் சினிமாவிற்கு S. J. Suryah மூலம் இவருடைய சினிமா வாழ்வில் மறக்க முடியாத படத்தை தந்து அசத்தினார்.
தமிழில் முதல் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆக குஷி படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், ஹிந்தியில் ஃபர்தீன் கான் ஆகியோரை வைத்து ரீமேக் செய்தார். கெஸ்ட் ரோலில் அவ்வப்போது நடித்து வந்த SJ. சூர்யா முதன் முதலில் நியூ படத்தில் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணத்தில் சினிமா உலகில் தன்னை நிரூபிக்க ஆரம்பித்தார்.
ஹீரோவாக நல்ல வரவேற்பு கிடைக்க அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற படங்களில் நடித்தார். கலவையான விமர்சனம் கிடைக்க அடுத்த சில வருடங்கள் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
2012-ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் சில நிமிடங்கள் நடித்து தான் இன்னும் சினிமாவில் தான் இருக்கிறேன் என தெரியப்படுத்தினார். அதை தொடர்ந்து பிட்ஸா 2, வை ராஜா வை போன்ற படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்து வந்தார்.
AR. ரஹ்மான் அறிவுறுத்தலால் இசை படத்திற்கு தானேஇசையமைக்க முடிவு செய்து 6 மாத காலம் இசை பயிற்சி பெற்றார். அதன் பிறகே இசை படத்தின் வேலைகளில் இறங்கினார் SJ. சூர்யா.
வில்லனாக முதலில் ஸ்பைடர் படத்தில் அறிமுகமாக, பின்னர் மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் x என தனக்கு தந்த கேரக்டரில் நடிப்பில் மிரட்டியிருப்பார்.
மெர்சல் படத்தில் சாதுவான வில்லனாகவும், மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரியாகவும், டான் படத்தில் கல்லூரி ஆசிரியராகவும் நடிப்பில் வேரியேஷன் காட்டி நடித்திருப்பார். இந்த படங்கள் SJ. சூர்யாவின் நடிப்பு திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

“எங்கய்யா இருந்த இவ்வளவு நாளா”, “இப்படி நடிக்கறயே” என சினிமா உலகம் இவரை கொண்டாட தொடங்கியுள்ளது. தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
சினிமா பக்கம் வந்தார் இயக்குனராக ஹிட் கொடுத்தார், சில ஆண்டுகள் பிரேக், மீண்டும் சினிமா பக்கம் வந்தார் ஹீரோவாக ஹிட் அடித்தார், சில ஆண்டுகள் பிரேக், மீண்டும் சினிமா பக்கம் வந்தார் வில்லனாக எண்ட்ரி தந்து தற்போது “நடிப்பின் அரக்கனாக” சினிமா உலகில் அசத்திவருகிறார்.
மெர்சல் படத்தில் விஜய் மற்றும் அவரது குழந்தையை பார்த்து “தளபதி, இளைய தளபதி” என்று கோரும் போது தியேட்டரில் விசில் பறந்தது. அதை தொடர்ந்து மாநாடு படத்தில் ” தலைவரே, தலைவரே” என்றும், “வந்த, சுட்ட, செத்த, ரிப்பீட்டு ” என்ற வசனமும் இன்றுவரை மீம் கன்டென்டாக இருந்து வருகிறது.
அதே போல மார்க் ஆண்டனி படத்தில் சில்க் சுமிதாவை பார்த்து வியப்பாகும் காட்சியும், “பொம்பள சோக்கு கேக்குதா” என்று கூறும் டயலாக் ரசிக்க வைத்தது.
இந்தியன் 2, கேம் செஞ்சார், LIC, ராயன், வீர தீர சூரன் போன்ற படங்கள் S. J. Suryah நடிப்பில் இனி வரவுள்ள படங்கள். அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெறவுள்ள படங்கள்.
2004 | நியூ |
2005 | அன்பே ஆருயிரே |
2006 | கள்வனின் காதலி |
2007 | திருமகன், வியாபாரி |
2009 | நியூட்டனின் மூன்றாம் விதி |
2015 | இசை |
2016 | இறைவி |
2017 | ஸ்பைடர் , மெர்சல் |
2019 | மான்ஸ்டர் |
2021 | நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு |
2022 | டான், கடமையை செய், வதந்தி(வெப் சீரிஸ்) |
2023 | பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் x. |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]