பா ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. கோலார் தங்க வயல் பற்றிய படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் பேசு பொருளாக அமைந்தது.
‘தங்கலான்’ படத்தின் ‘மினிக்கி மினிக்கி’ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஜி வி பிரகாஷ் இசையில், கவிஞர் உமா தேவி பாடல் வரிகள் எழுதி பாடகி சிந்தூரி விஷால் பாடியுள்ளார். துள்ளலான ஒரு பாடலாக நடனக் காட்சிகளுடன் வீடியோ வெளியாகியுள்ளது.

வழக்கம்போல சியான் விக்ரம் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தில் கடுமையாக உழைத்துள்ளார். உடன் நடிகை பார்வதி திருவோத்து தன்னுடைய இயல்பான உணர்ச்சிகரமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பது டிரெய்லர் இல் தெரிந்தது. இந்த படத்துக்கான ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]