புதிய இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எமகாதகி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு!
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில், ரூபா கொடுவயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு, ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மர்மம், அமானுஷம் நிறைந்த கிராமத்து பின்னணியை கொண்ட எமகாதகி படம் மார்ச் 7 ல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜனவரி 17 ல், எமகாதகி ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து, தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்க்கப்பட்டுள்ளது.
இதுவரை கல்லூரி சாலை, கதைப்போமா போன்ற குறும் படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் நரேந்திர பிரசாத் (NP) தற்போது தமிழ் சினிமாவில் எமகாதகி படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார். மேலும் இவர், டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார். எமகாதகி படம் இவருக்கு ஒரு நல்ல வெற்றி தரும் படமாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது.
From March 7❤️#Yamakaathaghi @RoopaKoduvayur @kailasam_geetha @srinivasjalakam @GanapathiReddy_ @venkatrahul_J @naisatmedia @arunasreeents@YeshwaPictures @gowthambharadwj@Peppin_J @sreejithsarang @sujithsarang @gnanakaravel @saregamasouth @Georgejecin @Synccinema @teamaimpr pic.twitter.com/KtBFXpAVlr
— NarendraPrasath_NP (@NPoffl) February 15, 2025
‘எமகாதகி’ படம் ஒரு கிராமத்து பின்னணியை கொண்ட அமானுஷ்யம் நிறைந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இளம்பெண் ஒருவரின் ஆன்மா இறுதிச்சடங்கிற்கும் பிறகும் அந்த வீட்டில் இருந்து வெளியேற மறுப்பதை மையமாக வைத்தும், சடங்கு நடக்கும் வீட்டில் உள்ள மக்களின் உணர்வுகளையும் மர்மங்களையும் கொண்டு உருவாகியுள்ளது.
இப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம் என்பதால் இதில் கிராமத்து மக்களின் சடங்குகள் சாஸ்திரங்கள் கட்டுப்பாடுகள் உணர்ச்சிகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் இப்படத்தில் பயங்கரம்முயூட்டும் அமானுஷய காட்சிகள் காட்டபட்டிருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
எமகாதகி படக்குழு
நடிகர்கள் | ரூபா கொடுவயூர், நரேந்திர பிரசாத்,கீதா கைலாசம், ராஜு ராஜப்பன்,சுபாஷ் ராமசாமி,ஹரிதா |
கதை, திரைக்கதை, இயக்கம் | பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் |
இசையமைப்பாளர் | ஜெசின் ஜார்ஜ் |
தயாரிப்பாளர் | ஸ்ரீனிவாசராவ் ஜலகம் |
துணை தயாரிப்பாளர் | கணபதி ரெட்டி |
வெளியீட்டு தேதி | 7 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]