திரைப்படத்தில் நடிகர்/கதாநாயகன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு நடிகை/கதாநாயகியும் முக்கியம். ஆண் உலகத்தை சார்ந்து பல திரைப்படங்கள் வந்தாலும், கதாநாயகியை மையமாக வைத்து வெளியான திரைப்படங்களும் உண்டு. இதற்கு முன்னோடி ஆக இருந்தவர் டி.பி.ராஜலக்ஷ்மி ரோஜா முத்தையா, 1911 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகைகளின் வருகை இன்று வரை நிகழ்ந்து கொண்டே தான் இயக்குகிறது.
திரைப்படம், மெகாத்தொடர், வெப் தொடர் என ஒரு நடிகை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பல தளங்கள் உள்ளன. ஆனால் அந்த கனவை நோக்கி முதல் அடி வைப்பது தான் குதிரை கொம்பு கதையாக பல எளிய பெண்களுக்கு உள்ளது. இந்த தடையை உடைக்கும் விதமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி “மகாநடிகை” என்ற புது ரியாலிட்டி ஷோவை தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வயது வரம்பு 18 முதல் 30 என அறிவித்தனர், இதற்கான நேர்முக ஆடிஷனும் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, சிதம்பரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் நடைபெற்றது. அதோடு ஆன்லைன் ஆடிஷன் செப்டம்பர் 14 முதல் 20 ஆம் தேதி வரை, அவர்கள் அறிவித்த whatsapp எண் 9884324095-க்கு “MAHANADIGAI” என டைப் செய்து அவர்களின் விவரங்கள் பெறப்பட்டது.
டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியின் முதல் மூன்று finalists ரெடி!!
தற்போது “மகாநடிகை” நிகழ்ச்சியின் grand launch குறித்த ப்ரோமோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது இணையதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரம் 5 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரவு 8.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “மகாநடிகை” ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் ஆன விஜய் ஆண்டனி தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார் விஜய் ஆண்டனி. “மகாநடிகை” நிகழ்ச்சியில் இடம்பெற உள்ள போட்டியாளர்கள் எத்தனை, அவர்களுக்கான போட்டி எவ்வாறு இருக்கும் என்பதை குறித்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் அதே நாள் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு போட்டியாக அமையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]